நபி(ஸல்) அவர்கள் மீது தங்கள் உயிரை விட அதிக மதிப்பு
வைத்திருக்கும் முஸ்லிம்கள், நபி(ஸல்) அவர்களை காண முடியாததை
பெரும் இழப்பாகவே கருதி வருகிறார்கள். இந் நிலையில் நபி(ஸல்)
அவர்களைக் கண்ட ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதென்பது
அவர்களைப் பொருத்தவரை பெரும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.
நாம்
ஒவ்வொரு நாளும் நம்மையே அறியாமல் எவ்வளவோ பாவங்கள் செய்து
வருகின்றோம். அவற்றை அழிக்கும் கருவியாக இருக்கக் கூடிய நல்ல
செயல்களை நாம் தொடர்ந்து செய்து வர வேண்டும்.